மருத்துவமனைகளில் பல பொருட்கள் இல்லாதநிலை அல்லது போதியளவு இல்லாத நிலை காணப்படுகின்றது. முக்கியமாக நான் எதிர்கொள்கின்ற, நான் மட்டுமல்ல அனைத்து குழந்தை நல மருத்துவர்களும் முக்கிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம். எங்களிடம் பிறந்த குழந்தைகள் சுவாசிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஈடிடியுப்கள் இல்லை(ETtubes) கொழும்பு வைத்தியசாலை ஒன்றின் மருத்துவர் சமன் குமார தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்த டியுப்கள் முடிந்துவிடும். ஆனால் ஏற்கனவே பயன்படுத்திய டியுப்களை பயன்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். இது எனக்கு மிகவும் விருப்பமில்லாத விடயம் அதனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இது மிகவுத் துயரமான ஒரு நிலைமை. ஆனால் வேறுவழியில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
reusable ventilator circuit பயன்படுத்துவதை கூட என்னால் தடுத்து நிறுத்த முடிந்தது. ஆனால் தற்போது நாங்கள் ஈடிடியுப் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
பயன்படுத்திய ஈடிடியுப்களை மீண்டும் பயன்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது கவலையான பரிதாபகரமான நிலைமை. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை.
எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால் இலங்கைக்கு ஈடிடியுப்களை அனுப்பிவைக்க முடியுமென்றால் அதுபெரும் உதவியாக அமையும். size ( 4- 3.5 -3 -2_) ஆனால் எங்களிற்கு அதிகமாக size 3- 35. தேவைப்படுகின்றது.
வருடாந்த தேவையாக 3 மற்றும் 3.5 டியுப்கள் 3500 தேவைப்படுகின்றது (40 500 – 2500 ( 2.5) 500 ( 2)) உங்களால் இதனை அனுப்ப முடியும் என்றால் அது பல உயிர்களை காப்பாற்றும். இது மிகவும் அவசரநிலைமை என தெரிவித்துள்ளார்.