
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டியூப் தமிழ் ஊடகவியலாளர் டிவனியா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு நேற்றைய தினம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது டிவனியா தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு சிரேஸ்ர சட்டத்தரணி ஐனாதிபதி சட்டத்தரணி உட்பட்ட சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கே இன்று மூவரடங்கிய நீதியரசர் குழாமால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவு உள்ளதால் அவர் தொடர்பாக தம்மால் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தே குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது