நாட்டில் இலவச சுகாதார உரிமை மறுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க இணைப்பாளர் மருத்துவர் K. உமாசுதன் இன்று தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும். தெரிவித்ததாவது.
https://fb.watch/ckbFUQ9oLq/
இன்று நாடு முழுவதும் சுகாதார துறையானது மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது.
சுகாதாரத்துறையானது தற்பொழுது மருத்துவ சாதனங்கள், அத்தியாவசியமான மருந்து பொருட்கள், நோயாளிகளின் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளிற்கு தேவையான அத்தியாவசியமான சேவைகளை வழங்குவதற்கு தேவையான ஆய்வுகூட உபகரணங்கள்,ஆய்வுக்கூடத்தில் நோயாளர்களின் இரத்த மாதிரிகளை சோதிப்பதற்கான மாதிரி இரசாயனப் பொருட்கள், மற்றும் ஐசியு தியேட்டர் போன்றவற்றில் நோயாளர்களுக்கு தேவையான மருத்துவ வசதியை வழங்கக் கூடிய உபகரண பற்றாக்குறைகள், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஒக்சிசனை வழங்குவதற்க்கு தேவையான et Tupe போன்ற மிகவும் அத்தியாவசியமான உபகரணங்கள் அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் போன்ற அனைத்துக்குக்குமே நாடளாவியரீதியில் மிகுந்த தட்டுப்பாடான நிலைதான் தற்போது காணப்படுகிறது.
இந்த தட்டுப்பாடான நிலமைக்கு காரணம் முறையற்ற அரசின் நிதி நிர்வாகமும், முறையற்ற திட்டமிடல் இன்மையுமே. இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகிய நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே சுகாதாரத்துறை அமைச்சுக்கு அதாவது சுகாதார அமைச்சு செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றோம். பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு நாங்கள் எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றோம்.
இவ்வாறான பற்றாக்குறைகளை நாங்கள் மிகவும் குறுகிய காலத்தில் எதிர்கொள்ள வேண்டி நேரிடும். அதற்குரிய முறையான நடவடிக்கைகளை, திட்டமிடல்களை முன்கூட்டியே ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்தி தாருங்கள் என்று நாங்கள் கோரியிருந்தோம். ஆனாலும் எமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படாத நிலமையும், தற்போழுது மக்களின் அடிப்படை உரிமையாகிய இலவச சுகாதாரமானது இலங்கை நாட்டு மக்களுக்கு உரிய அடிப்படை இலவச சுகாதாரமானது அடிப்படை உரிமையான இலவசம் சுகாதாரமானது தற்பொழுது அவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.
அதாவது அவர்களது உயிர் காக்கும் உரிமை, அவர்களது உயிர் காக்கும் சுகாதார துறையானது தற்பொழுது மிகவும் நலிவடைந்த நிலையில் மிகுந்த அத்தியாவசியமான தேவைகளை கூட வழங்க முடியாத நிலையில் உள்ளது. அதற்கு உதாரணமாக தற்போது நாட்டின் பிரதானமான வைத்தியசாலைகள் சத்திர சிகிச்சைகளின் அளவுகளை குறைக்க தொடங்கியுள்ளன.
அதற்கு மருந்து பொருட்கள் இல்லாத காரணம், மற்றும் வைத்தியசாலை உபகரணங்கள் தட்டுப்பாடு, போன்ற பிரதான காரணங்களாக இருக்கின்றது. ஆகவே இதனை நாங்கள் கண்டிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் கடந்த திங்கட்கிழமை அதாவது கடந்த 7ஆம் திகதி கொழும்பில் உள்ள எமது தாய்ச் சங்கத்தில் அவசரமாக மத்திய குழுக் கூட்டமானது கூட்டப்பட்டு அங்கு எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் எமது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த சுகாதாரத்துறை நலிவு தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களையும், கண்டன பேரணிகளையும் நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அரசாங்கத்தை அழுத்தம் கொடுப்பதன் மூலம் இந்த சுகாதாரத் துறையை, இலவச சுகாதார துறைக்கு ஆனா முன்னுரிமையை அதற்க்குரிய முழுமையான வளங்களை, அதற்குரிய மருந்து பொருட்களை, அத்தியாவசியமான மருந்து பொருட்களை, அத்தியாவசியமான உபகரணங்களை, வழங்கி மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக நாங்கள் கேட்டுப் போராடி வருகின்றோம்.
அந்த வகையில் அதனைத் தாண்டி எமது அரச வைத்திய அதிகாரிகள் சங்கமனது தற்பொழுது பல செயல்திட்டங்களை வகுத்துள்ளது.
அதன் அடிப்படையில் நாம் பல்வேறு நாடுகளிலுமுள்ள இதர வெளிநாடுகளில் உள்ள எமது உறவுகளை, எமது மக்களுக்காக அவர்கள் மனமுவந்து தங்களது நிதிப் பங்களிப்பை, அல்லது அவர்களால் முடிந்தளவு தேவையான மருந்து பொருட்களை , மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு முன்வருமாறு கோரியிருக்கின்றோம்.
அதற்க்கு நாங்கள் விசேட மருத்துவர் செயற் குழு ஒன்றை அமைத்து அதற்கு பொறுப்பாக இரண்டு பிரதான வைத்திய அதிகாரிகள் எமது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட வைத்திய அதிகாரிகள் பொறுப்பு வகிக்கின்றனர்.
அதன்மூலம் அவர்கள் தற்பொழுது வெளிநாடுகளில் இருக்கின்றவர்களுடன் தொடர்பு கொண்டு அதற்குரிய உதவிகளை பெறுவதற்கான வழி வகைகளை வகுத்துள்ளனர். அதற்கு மேலதிகமாக நாங்கள் சுகாதார அமைச்சையும் கோரியிருக்கின்றோம்.
இலங்கையில் தற்பொழுது உள்ளது நாடு தழுவிய ரீதியில் சுகாதார நலிவு
சுகாதார சீர்கேடு என நாங்கள் இதனை குறிப்பிட வேண்டும்.
இந்த நிலைமையானது தாங்கள் அனைவரும் அறிந்தது 2019 காலப்பகுதியில் 2020 காலப்பகுதியில் covid ஆனது இலங்கையை தாக்கியிருந்தது.
கடந்த இரு வருடங்களாக கோவிட் தொற்றிடம் நாங்கள் எவ்வாறு போராடினோம்
எவ்வாறு பாரிய நோய் தொற்றை நாங்கள் முகங்கொடுத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சு இணைந்து மக்களை பாதுகாப்பதற்கு எவ்வளவு நாங்கள் போராடிக் கொண்டியிருக்கின்றோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்ததே. அதில் நாங்கள் வெற்றியும் கண்டுள்ளோம் என்பது கண்கூடு. ஆனால் அப்போது இருந்தது எமக்கு முன்னால் நாங்கள் கிருமியுடன் போராட வேண்டியிந்தது. நாங்கள் அதற்க்கான வழிவகைகளை ண்டறிந்தோம்.
அதற்காக நாங்கள் போராடினோம் வெற்றியும் அடைந்தோம்.
ஆனால் தற்பொழுது இருப்பது நாங்களே கையறு நிலையில் உள்ளோம்.
அதாவது எங்களிடம் மருந்து பொருட்கள் இல்லை, அத்தியாவசிய உபகரணங்கள் இல்லை, மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான மருத்துவ பொருட்கள் இல்லை, எனும் நிலையில் சுகாதாரத்துறையானது கைகட்டி மக்கள் இறப்பதையோ மக்கள் நலிவுறுவதையோ, மக்கள் நோய்களால் பாதிப்படைவதையோ ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையை நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பது என்பது உண்மையில் எங்களால் மிகவும் துரதிஷ்டவசமாக வசமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
அதற்கான முற்று முழுதான காரணமாக அரசினுடைய திட்டமிடப்படாத நடவடிக்கையும், முறையற்ற நிதி நிர்வாகம் இதற்குரிய முழு காரணமுமாக இருக்கின்றது.
ஆகவே நாங்கள் இதனை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.
அரசு அரச வைத்தியர்கள் சங்கம் இதனை மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. நாடளாவிய ரீதியில் நாங்கள் இதற்காக அனைத்து மக்களையும் தெளிவூட்டி வருகின்றோம்.
மற்றும் நாங்கள் அரசை கேட்டுக்கொள்வது இதற்கு மிகவும் விரைந்து இதற்குரிய தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.
அத்துடன் தற்பொழுது நாங்கள் ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றோம். இருகம என்று சொல்லப்படுகின்ற கொவிட் தொற்று முதலாவது அலையின்போது
உருவாக்கப்பட்ட ஒரு நிதியம். அந்த நிதியத்தில் உள்ள எஞ்சியுள்ள பணத்தை, எஞ்சியுள்ள பொருட்களை, தற்பொழுது மிக வினைத்திறனாக பாவித்து அத்தியாவசியமான மருந்து பொருட்களை அதாவது தாங்கள் பட்டியலிட்டு வழங்கியிருக்கின்றோம். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம். அத்தியாவசியமான மருந்து பொருட்களை
இலங்கையின் அனைத்து வைத்தியசாலைகளையும் தொடர்பு கொண்டு பட்டியலை தயாரித்து வருகின்றோம். அதனை நாங்கள் கையளிக்கின்றோம்.
அந்த அத்தியாவசியமான மருந்து பொருட்களை விரைந்து அனைத்து வைத்தியசாலைகளுக்கும் வழங்க வேண்டும். அப்படி வழங்குவதன் மூலமே நாங்கள் மக்களுக்கான சேவைகளை வழங்கக் கூடியதாக இருக்கும்.
இதற்கு யாழ் மாவட்டமும் விதிவிலக்கல்ல.
இலங்கை முழுவதும் உள்ள இந்த தட்டுப்பாடான பாரிய பல்வேறு விதமான வரிசைகளில் உள்ளன. பல்வேறு விதமான வரிசைகள் ஒவ்வொருவிதமான நிறுவனங்களுக்கும் முன்னால் உள்ளன. ஆனால் நோயாளர் வரிசை என்பது மிகவும் பாரதூரமான ஒன்று.
சுகாதார துறையானது வருமுன் காப்பு பகுதி, சிகிச்சை பகுதி இந்த இரண்டு துறைகளுமே நலிவுறும் நிலையில்தான் உள்ளது. இந்த தட்டுப்பாடான நிலமையில்
அப்படியென்றால் நோய் தடுப்புபானது சரியான முறையில் நடைபெறாத பொழுது நோயாளர்களின் எண்ணிக்கை மிகவும் விரைவாக அதிகரிக்கும்.
இவ்வாறு அதிகரிக்கும் பொழுது நோயாளரின் நோய் தடுப்பும் இல்லை, நோயாளர் பராமரிப்பும் இல்லை, அதே நேரம் நோயாளியை காப்பதற்கு வழங்கக்கூடிய மருந்துகளும் இல்லை என்றால் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக போய்விடும். ஒவ்வொரு ஆரோக்கியமானவர்களும் ஆரோக்கியமற்ற எதிலிகளாக தள்ளப்படுவார்கள். அதனை நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டிய நிலைமை வந்துவிடுமோ என்று நாங்கள் பயப்படுகிறோம்.
அதனால் நாங்கள் அதற்குப் பொறுப்பான அமைச்சையும், அரசாங்கத்தையும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக் கொள்வது என்னவெனில் இதற்கு உடனடியாக விரைந்து அதற்கு பொருத்தமான அதற்கு தாங்கள் முன்வைத்த தீர்வுகளை உடனடியாக அமல்படுத்தி மக்களுக்கு தேவையான அடிப்படை உரிமையான இலவச சுகாதாரத்தை, அவர்களுக்கு தேவையான நோய் காக்கும் அந்த துறையை மழுங்க விடாமல், அவர்களுக்கு தேவையான உரிய வசதிகளை, உரிய முறையில் வழங்கி, நாட்டின் சுகாதாரத்தை, நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு, அரசும் உரிய அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்று நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்கிறோம். என்றார்.