மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், வவுனியா மாவட்டத்தில், இடர் கால நிவாரண உதவி திட்டம், இன்று மதியம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன பணிப்பாளர் ஜே.யாட்சன் பிகிறாடோ, வவுனியாவில் உள்ள அலுவலகத்தில், திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். முதல் கட்டமாக, நூறு குடும்பங்களுக்கு, உதவி வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு, இடர் கால நிவாரணம், கடந்த சனிக்கிழமை காலை, மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, வடக்கில் பல நூற்றுக்கணக்கான பின்தங்கிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன
இந்த நிலையில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், வடக்கில், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும், முதல் கட்டமாக, ஆயிரத்து 200 குடும்பங்கள் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, இடர் கால நிவாரண உதவியாக, சுமார் 3 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.