அரசியலமைப்புக்கு அமைவாக அதேபோன்று நாட்டில் காணப்படும் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பிலேயே நாம் கலந்துரையாடி வருகின்றோம் என்று, பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரைத்த அவர்,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்காக பொதுவான நோக்கத்துக்காக 42 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்துள்ளோம்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
நாட்டில் சிறந்த நிதிமுகாமைத்துவம் இருக்கவில்லை. பல்வேறு காரணங்களால் நாட்டின் அத்தியாவசிய தேவைகளான உணவு மற்றும் எரிபொருள் என்பன இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு சென்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.