கல்விளான் சுழிபுரம்
வின் ஸ்ரார் (Wine Star Sports Club) விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்க ஐக்கிய மக்கள் சக்தியின்
வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) என்ற அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவம் ரூபா 20,000/= பெறுமதியுடைய விளையாட்டுப் பொருட்கள் நிர்வாக உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதிப்பங்களிப்பினை கனடா வாழ் பிரஜையான து.கமலநாதன் குடும்பம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது