
2022 ம் ஆண்டிற்க்கான சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், புத்தாண்டு சந்தையும் அண்மையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கண்காட்சியினை யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் தி.விஸ்வரூபன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இதில் வடமராட்சி கிழக்கில் சுயதொழில் செய்து வருகின்ற தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை கண்காட்சிப் காட்சிப்படுத்தியிருந்தனர்.
பொதுமக்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்