
பெருமளவு எரிபொருளை பதுக்கிவைத்து, விற்பனை உரிமம் இல்லாமல் அதிகவிலைக்கு விற்பனை செய்துவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கைதான சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 245 லீற்றர் டீசல், 478 லீற்றர் பெற்றொல், 80 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
வடக்கில் பதுக்கல் வியாபாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் முதல் அதிரடி நடவடிக்கை இதுவாகும்.