
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், குழுவில் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் – என்றார்.
மேலும், 81 நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 493 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கை பொலிஸாரும் அரசாங்கமும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளதாகவும், அதனை தொடர்ந்தும் மேற்கொள்ளும் எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படவில்லை என்ற கூற்றுகளை நிராகரிக்கப்பதாகவும் அவர் தெரிவித்தார்.