புத்தாண்டு காலத்தில் விபத்துக்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
பண்டிகைக் காலத்தில், பட்டாசு உட்பட கேளிக்கை வெடிகள் மூலம் ஏற்படும் விபத்துக்கள் அதிகளவில் பதிவாகி வருவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின், பயிற்றுவிப்பு தாதிய உத்தியோகத்தர் புஷ்பா ரம்யாணி சொய்ஸா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தற்போது வீடுகளில் பெற்றோல் சேமித்து வைக்கப்படுகின்ற நிலையில், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக, பெற்றோலைப் பயன்படுத்தியமையால் விபத்து ஏற்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.