ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பின்னர் மறைகரம் ஒன்று செயற்படுவதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை அந்த மறைகரமே அழித்தது எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
11 கட்சிகள் வழங்கிய யோசனைகளை நிறைவேற்றவிடாமல் அந்த மறைகரம் ஜனாதிபதியை தடுக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான 11 கட்சிகளின் யோசனைகள் ஜனாதிபதிடம் வழங்கப்பட்டன மக்களின் தேவைகளை நோக்கி பணியாற்றுவதே இதன் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
சில தனிநபர்கள் பழைய தந்திரோபாயங்களை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.