உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியமான சுமியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று அறிய வருகின்றது. இதில் பல சடலங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பிராந்தியத்துக்கு பொறுப்பான தளபதி டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி கூறியுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்களில் சித்திரவதைகளுக்கு உள்ளானமைக்கான அடையாளங்களும் தலையில் துப்பாக்கி சூட்டு காயங்களும் காணப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
முதியவர்கள், குழந்தைகள் என பலரையும் ரஷ்ய இராணுவம் துப்பாக்கியால் சுட்டது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, சுமி நகரத்தில் பலர் காணாமல் போயுள்ளனர் அல்லது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பிராந்திய தளபதி தெரிவித்தார்.
ஆனால், ரஷ்யா இந்தப் பகுதியில் போர் குற்றம் எதனையும் தமது படைகள் செய்யவில்லை என்று மறுத்து வருகின்றது.