அரசாங்கம், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்கப் பிரேரணையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று கையொப்பமிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை அவர் கையொப்பமிட்டார். இதன்போது அவர் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பிரேரணை ஆவணத்தில் கையொப்பமிட்டனர்.
மாற்றம் இல்லாமல் நாங்கள் நிறுத்த மாட்டோம். ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடுகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் முற்போக்கான அரசமைப்பு திருத்தங்களை நாம் முன்னெடுப்போம். ஜனநாயகத்தின் அனைத்து வெற்றிகளையும் அடைவதற்கான போராட்டம் உறுதியான முறையில் மேற்கொள்ளப்படும் – என்று இதன்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.