கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக 7வது நாளாகவும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவினை தொிவித்தமைக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் கைதான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வீடு செல்லவேண்டும். எனக்கோரி கொழும்பு காலி முகத்திடலில் 7 வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
இந்த போராட்டத்தில் நேற்றய தினம் பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது ஆதரவினை தொிவித்ததுடன் போராட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் விசேட விசாரணை பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த குறித்த பொலிஸ் அதிகாரி விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் இன்று நீதிமன்றில் குறித்த பொலிஸ் அதிகாரி ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.
இதன்பொது குறித்த பொலிஸ் அதிகாரிக்கு ஆதரவாக 12 சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையானதுடன் ஒருவருடைய கருத்தை கூறுவது குற்றமல்ல அது அவருடைய அடிப்படை உரிமையாகும்.
என நீதிமன்றில் வாதிட்டனர். இந்நிலையில் கைதான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.