
மனிதாபிமானத்தால் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் புலம் பெயர் உறவுகளால் தென்னிலங்கை மக்களுக்கு இன்றைய தினம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.





நேற்றைய தினம் கொழும்பிலுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அன்பும் நட்பும் கொண்ட எமது சிங்கள நண்பர்களுக்கு எமது நன்றியையும் மனிதாபிமானத்தையும், இந்த எதிர்பாராத சூழலில் காண்பிக்க விரும்புகிறோம்.
தமிழர்கள் இந்த இன்னல்களை அனுபவித்தபோது ஊடகங்கள் உங்களுக்கு அவற்றை மறைத்துவிட்டன.
அரசியல் ரீதியில் தமிழர்களை விரும்பாதவர்களாக பெரும்பான்மை மக்கள் ஆக்கப்பட்டார்கள்.
தற்போதைய அரசாங்கம் கபடத்தனமாக உங்களின் ஆதவரவைத் திரட்டியே ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனை எங்கள் சகோதரர்களாகிய உங்களுக்கு தோழமையோடு தெரியப்படுத்துகிறோம்.
எமது நட்புக்கும் மனிதாபிமானத்துக்குமான ஒரு சமிக்கையாக இதை நீங்கள் ஏற்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
எதிர்காலத்தில் இந்த உறவு மென்மேலும் வளர்ந்து நமது பிரச்சினைகள் புரிந்துகொள்ளப்பட்டு தீர்வுகள் உருவாக்கப்படவேண்டும் என்ற செய்தியும் பகிரப்பட்டுள்ளது.
குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வில் மனித உரிமைக்கான கிராமம் அமைப்பின் இயக்குநர் முருகவேல் சதாசிவம், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திரு.திருக்கேதீசுவரன், முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் செயலாளர் திரு ஜீவாநந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிங்கள, இஸ்லாம், தமிழ் சகோதரர்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.