
சித்திரை புத்தாண்டு விழா மிருசுவில் வடக்கு பாரதி முன்பள்ளியில் ஆசிரியர் தலைமையில் 14/04/2022 அன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை முதல் உதவிச்சங்கத்தின் இந்து சமயத் தொண்டர் சபையின் தேசிய ஆணையாளர் சிவத்திரு வை.மோகனதாஸ், அதன் தேசிய கண்காணிப்பாளர் சிவத்திரு வை.ஜெகதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.



இதில் புலம் பெயர் தேசத்தில் வசிக்கும் சமூகசேவையாளர் திரு.கருணாகரன் விதுஷன் அவர்களின் நிதி அனுசரணையில் முன்பள்ளி மாணவர்கள் 48 பேருக்கு 65000/- ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும் இலங்கை முதலுதவி சங்க இந்து சமயத் தொண்டர் சபையினரால் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் பாரதி முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்