“மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது பதவிக்காலம் முடிவடையும் வரை நான் பதவியில் இருப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது
“புதிய ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். எனினும், எதிர்க்கட்சியினர் முன்வராதமையினாலேயே, புதிய அமைச்சரவை நியமிக்கத் தீர்மானித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்களுடன் ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி இன்று மாலை புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், புதிய அமைச்சரவையில் ராஜபக்சர்கள் எவரும் அமைச்சு பொறுப்புகளை ஏற்காதிருப்பதற்கு தீர்மானம் எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.