ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 10 நாட்களாக ஓயாது தொடர்ந்து வருகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு பாகங்களிலும் இருந்து ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், போராட்டக் காரர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிகொடுக்காத நிலையில் நேற்றையதினம் கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக மாந்திரீக பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
பில்லி சூனியம் செய்வதற்கென்று மாத்தறையில் இருந்து வந்த ஒருவர் விசேட பூஜை வழிபாடுகளை செய்துள்ளார்.
பெரும்பான்மை இன மக்களால் பல கோரிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் ராஜபக்ச அரசாங்கம் பதவி விலகாததால் இவ்வாறு பில்லி சூனியம் வைத்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.