புதிய அமைச்சரவை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.
அதற்கமைய, புதிதாக 17 அமைச்சர்களும், 24 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், இன்றைய தினம் மேலும் சில இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
அந்தவகையில் நெசவுக் கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக முஷாரப் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.