இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தற்போதைய அரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்பட்ட நெருக்கடியாகும். இந்த நெருக்கடிக்கு காரணமானவர்கள் தற்போதைய ஆட்சியாளர்களே.
எனவே நெருக்கடிகளை தோற்றுவித்தவர்களுடனேயே அதற்கான தீர்வுகளை முன்வைப்பதில் எவ்வித பலனும் கிடையாது. நாட்டில் உரப்பிரச்சினை ஏற்படும்போது அது தொடர்பில் பாராளுமன்றத்தில் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அதன்போது விவசாயத்துறை அமைச்சர் பல்வேறு நிறுவனங்களிடம் பணத்தை பெற்றே இவ்வாறு கதைப்பதாகக் கூறினார். விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராடினர்.
இதன்போது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் விவசாயிகளை தூண்டிவிட்டே அவர்களை வீதிக்கு இறக்கியிருப்பதாக கூறினர். கடந்த மார்ச் மாதம் மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தை ஜனாதிபதி கூட்டினார். இதன்போது உரம் தொடர்பிலான தீர்மானத்தை எவ்வகையிலும் மாற்றப்போவதில்லை என்று கூறினார்.
நேற்றைய தினம் அது தவறு என்று ஜனாதிபதி கூறினார். நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தியன் பின்னரா ஜனாதிபதி தனது தவறை உணர வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.