இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக பாராளுமன்றத்தில் குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளை பெற்றுக்கொள்வதுத் தொடர்பாக கடந்த 5,6,7 ஆம் திகதிகளில் நடைபெற்ற விவாதங்களின்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா?
எந்தவிதத் தீர்மானங்களும் எடுக்கப்படாமல் குறித்த அமர்வுகள் நிறைவுற்றதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எவ்வாறாயினும் நாட்டின் தற்போதைய தற்போதைய நிலைமைகள் தொடர்பில் சாதாகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை கருத்திற்கொண்டு 9ஆவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஏப்ரல் 5,8ஆம் திகதிகளில் எனது தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
தற்போதைய நெருக்கடி நிலைமையில், மக்கள் பிரநிதிகள் எடுக்கக்கூடிய தீர்மானங்கள் தொடர்பிலான யோசனைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.
எமது தாய்நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்படுமாறு சபநாயகர் என்ற முறையில் நான் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.