நெருக்கடி நிலைமையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சூ வெய் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கமும் மக்களும் முகங்கொடுக்கும் சிரமங்களை சமாளித்து பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை பேணுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று வெய் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனும், இந்தியாவுடனும் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வரும் நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.