றம்புக்கனை சம்பவத்தின் போது தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைத்த காணொளி தன்னிடம் உள்ளதாக நேரில் பார்த்த ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
கேகாலை நீதவான் வாசனா நவரத்ன நேற்று முன்தினம் (20) சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு சென்ற போது பொலிஸார் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்ததைக் கண்டதாக ஒருவர் நேரடியாக சாட்சியமளித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போது இரண்டு பொலிஸாரும், இராணுவத்தினர் ஒருவரும் வருகை தந்தனர்.பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு உயரமான,மெலிந்த பொலிஸ் ஒருவரே தீ வைத்தனர்.
இது தொடர்பிலான காணொளிகள் எதிர்வரும் தினங்களில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார். றம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியதனால் பொலிஸார் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
றம்புக்கணையைச் சேர்ந்த 42 வயதுடைய கே.டி.லக்ஷான் என்பவர் றம்புக்கணையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்