வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஊர்காவற்துறை பொதுசுகாதார வைத்தி பணிமனைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்காமல் அங்கு பணிபுரிந்த வைத்தியரை தெல்லிப்பழைக்கு பணி இடம்மாற்றியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதேசமட்ட அமைப்புகள் ஊடாக பொதுமக்கள் தகவல் தருகையில்,
மிகவும் கஷ்டப் பிரதேசமான ஊர்காவற்துறை பிரதேசம் அங்கு கடமையாற்றும் வைத்தியர்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.
அனலைதீவு, எழுவைதீவு ஆகிய இரண்டு கடல்கடந்த பிரதேசங்களை உள்ளடக்கியதாக ஊர்காவற்தறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை செயல்படுகிறது.
இவ்வாறான நிலையில் அங்கு கடமையாற்றும் வைத்தியருக்கு பணி இடமாற்றம் வழங்குவது நிர்வாக கடமையாக இருந்தாலும் அதற்கு உரிய கடமை வைத்தியரை நியமித்த பின்னரே இடமாற்றம் வழங்கியிருக்க வேண்டும்.
ஆகவே வடக்கில் சுகாதாரத்துறை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் பணி இடமாற்றங்களை வழங்குவது தொடர்பில் மாகாண சுகாதார பணிப்பாளர் கவனத்தில் கொள்ள வேண்டும். என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்