
யாழ்.பொன்னாலை சந்திக்கு அண்மையில் ஜே/ 170 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது.
முத்துக்குமாரசாமி விநாசித்தம்பி என்பவரது எட்டு பரப்புக் காணியில் இலங்கை கடற்படையினர் கடற்படை முகாமை அமைத்துள்ள நிலையில் குறித்த காணியை நில அளவீட்டை மேற்கொள்வதற்காக நில அளவைத் திணைக்களம் வருகை தந்த நிலையில் காணி உரிமையாளர்,
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்னர். இதனை அடுத்து குறித்த காணியினை அளவீடு செய்ய முடியாத நில அளவை திணைக்களம்
காணி உரிமையாளரிடமும் அங்கு எதிர்ப்பில் ஈடுபட்டவர்களிடமும் கடிதத்தினை வாங்கிய பின்னர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.