
பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 25ஆம் திகதி பொபிக்னி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் தமிழர்கள் தங்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாசைகள் மற்றும் பொபிக்னி நகர சபையுடன் இணைந்து யாழ்.மாநகர சபை எவ்வாறு பணியாற்றலாம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பொபிக்னி நகர முதல்வர், அதன் பிரதி முதல்வர், நகர சபை உறுப்பினர்கள் , யாழ்.மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் மற்றும் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வாதாரஜன் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொபிக்னி நகர சபையிருக்கு யாழ்.மாநகர சபையினாரால் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது.






அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற கலாசார பண்பாட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக யாழ்.மாநகர முதல்வர், மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.