
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வல்வெட்டித்துறை கிளைக்கு உட்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, பருத்தித்துறை பிரதேச ஆகிய வற்றிற்க்கு உட்பட்ட சிற்றூளியர் சங்க பிரதிநிதிகளால் வல்வெட்டித்துறை பேருந்து நிலையம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்ககோரியே இப்பாராட்டம் இடம் பெற்றது.
குறிப்பாக எரிபொருள் விலையேற்றம், காஸ் விலையேற்றம், மற்றும் தட்டுபாடுகளுக்கு எதிராகவும், மின்சாரத் தடையை நீக்க கோரியுமே பாதாதைகள் ஏந்தி கோசம் எழுப்பியதுடன் வீதியால் கோசமிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதில் வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட அகில இலங்கை அரசாங்க சிற்றூழியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.