ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில், ஆழுங்கட்சி நாடாளுமன்ற விசேட குழு கூட்டத்தில் அமைச்சர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருப்பதாக கொழும்பு செய்திகள் தொிவிக்கின்றன.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அனைத்து ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் அனுப பஸ்குவல் ஆகியோர் ஊடகங்களுக்கு கூறினர்.
இதேவேளை, கலந்துரையாடலின் போது அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக இன்றைய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.