வடக்கு ஆளுநர் இந்தியாவுக்கு திடீர் விஜயம்! –

நாட்டில் தற்போது பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது.  மக்கள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவே பதவி விலக கோரி நாள்தோறும் பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் சூழலில் ஆளுநர் ஜீவன் தியாகராயா தமிழகம் பயணித்துள்ளார்.

நாள்தோறும் இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார விலை உயர்வு ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் .தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை அளித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை நாட்டின் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நேற்று  இந்தியா சென்றுள்ளார். விமானம் மூலம் சென்னை சென்று அங்கு இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்திறங்கிய அவர் எங்கே செல்கிறார் என்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews