தனியார் கொள்கலன் உரிமையாளர்களின் அனுமதிப்பத்திரத்தை முடிந்தால் இரத்துசெய்து காட்டுமாறு இலங்கை எரிபொருள் தனியார் கொள்கலன் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சரின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் பயப்பட போவதில்லை என்று சங்கத்தின் செயலாளர் டீ.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
இவ்வாறான கதைகளுக்கு கொள்கலன் உரிமையாளர்கள் அச்சப்பட மாட்டார்கள். புதிய அனுமதிப்பத்திரங்களுடன் கொண்டுவரப்படும் எரிபொருள் தாங்கி வாகனங்களை சேவையில் இணைத்துக்கொள்ள குறைந்தது ஆறு மாதங்களேனும் செல்லும்.
இதேவேளை, தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் எரிபொருள் விநியோக நடவடிக்கையிலிருந்து விலகி செயற்படுமாயின் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்துள்ள நிலையிலேயே, தனியார் கொள்கலன் உரிமையாளர்களின் சங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.