நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுத்தது!

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க் கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மக்கள் பக்கம் நின்றே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுத்தது என்று இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் நுவரெலியா, கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான், மேலும் தெரிவித்ததாவது,

இ.தொ.கா என்பது மக்கள் இயக்கம். மக்களை பாதுகாத்த அரசியல் இயக்கம். மக்களுக்கு உரிமைகளை வென்றுக்கொடுத்த அரசியல் கட்சி.

நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுத்தது. ஆனால் எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஒரு சிலர் செயற்படுவதால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நான் பதவிக்காக அரசியல் செய்பவன் அல்லன். மக்களுக்கானதே எனது அரசியல் பயணம். அதனால்தான் ராஜபக்ஷ அரசாங்கத்துடனான உறவை முறித்துக்கொண்டு, இன்று மக்கள் பக்கம் நிற்கின்றோம். அப்படி இருந்தும் வரலாறு தெரியாத சிலர், காங்கிரஸை விமர்சித்து வருகின்றனர் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews