கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
73 வருடங்களாக அரச நிர்வாகத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாகவே நாடு இன்று இவ்வாறானதொரு நிலைமையை எதிர்கொண்டுள்ளது.
அரசியல்வாதிகள் செய்த எந்த விடயங்களையும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுத்தாதன் காரணமாகவே நாட்டில் இவ்வாறான ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே அரசியல்வாதிகள் செய்யும் விடயங்களை கண்காய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற விடயத்தை ஆறு தினங்களுக்கு முன்னர் நாம் மக்கள் முன்னிலையில் வைத்தோம்.
அரசியலமைப்புக்குள் இவ்விடயத்தை உள்வாங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
மக்களது பணத்தை கொள்ளையடிக்காத ஒரு அரசியல் கலாசாரம் உருவாக வேண்டும்.
சிவில் அமைப்பு என்ற முறையில் இவ்விடயத்தை நாம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
உதாரணமொன்றை கூறுகின்றேன். அரச அதிகாரி ஒருவரின் வாகன ஊழல் மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்தோம். ஒருவாரத்துக்கு பின்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் எமக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. இவ்விடயமானது குற்றப்புலனாய்வு திணைக்களுடன் தொடர்புடையது அல்ல. கொழும்பு விசேட பிரிவில் முறைப்பாடு செய்யுங்கள் என்று கடிதம் அனுப்பப்பட்டது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்த உடனயே நாம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு சென்றோம். எனினும் அந்த ஆணைக்குழுவும் இவ்விடயமானது தமது ஆணைக்குழுவுடன் தொடர்புடையதல்ல என்று கூறினார்கள்.
இதுவே உண்மை நிலவரம். அரச அதிகாரிகள் தங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை.
ஒரு தெளிவான அரசியல் பலம் இல்லாததன் காரணமாகவே நாட்டில் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.