நாமல் ராஜபக்ஷ, யோசித ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பலர் சம்பந்தப்பட்ட ஊழல்களை அம்பலப்படுத்தும் ஆவணங்களை ஜே. வி. பி. நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அந்தக் கட்சியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க விசேட மாநாட்டில் அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் பொது நிதியை மோசடி செய்த புலனாய்வு அதிகாரிகள் தொடர்பான 500இற்கும் மேற்பட்ட ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிமல் பெரேரா, திருக்குமார் நடேசன் ஆகியோர் ஊடாக யோஷித ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோர் பொதுப் பணத்தை மோசடி செய்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பிரான்ஸ் எயார் பஸ் ஒப்பந்தம், ஜின் நில்வள திட்டம், க்ரிஷ் உடன்படிக்கை, ஹெட்ஜிங் ஒப்பந்தம், ஹலோ கோர்ப் ஒப்பந்தம் ஆகிய கோப்புகளே வெளிப்படுத்தப்பட்டன.
மத்திய கலாசார நிதியத்தின் 300 கோடி ரூபாய் நிதியை முறையான அனுமதியின்றி சஜித் பிரேமதாஸ துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.