இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகருக்கு கடும் நெருக்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதி சபாநாயகரை நியமிப்பதா அல்லது தற்போது ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதா என்பதை சபாநாயகர் இன்று தீர்மானிக்க வேண்டியுள்ளது.
நேற்று காலை கூடவிருந்தநாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவிருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமையால் அது நடைபெறவில்லை.
இதன்படி இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியினர் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.