இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
நாடு வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டது.
கடந்த 30 மாதங்களில் எடுத்த தவறான தீர்மானங்கள் காரணமாகவே நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தது.
சிறந்த வரிகொள்கை ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று நிதி அமைச்சர் கூறும்போது அதற்கு கைதட்டுகின்றனர் எனினும் அவர்களே கோடிஸ்வரர்களுக்கு 600 பில்லியன் வரி நிவாரணத்தை வழங்கும்போதும் கைதட்டினர்.
உண்மையில் இவற்றை தெரிந்துகொண்டா அரசாங்கம் செய்கின்றது என்று தெரியவில்லை
இந்த அரசாங்கத்தின் வரி நிவாரணம் காரணமாகவே தேசிய உற்பத்தியானது பூஜ்ஜியம் என்ற நிலைமைக்கு குறைந்தது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் தவறான நிர்வாகத்தால், முட்டாள்தனமான செயற்பாடுகளால் உலக தரப்படுத்தல் நிறுவனமானது எமது நாட்டை கீழ்மட்டத்துக்கு தாழிறக்கியது.
அது தொடர்பில் கேள்வி கேட்கும்போது இது சர்வதேச சதி என்று அஜிட் நிவாட் கப்ரால் கூறினார்.