வல்லை கொலை சந்தேக நபர்களுக்கு தடுப்பு காவல்…..!

வல்லை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்திறக்குரியவர்கள் இருவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காலை காங்கேசன்துறை போலீஸில் ஒருவர் சரணடைந்த நிலையில் மற்றையவர் நெல்லியடி போலீஸில் சரணடைந்திருந்தார். குறித்த இருவரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தின் முன்னிறித்திய நிலையில் அவர்களை தடுப்பு காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்னும் சிலர் கைது செய்யப்பட உள்ளதாக நெல்லியடி போலீசார் தெரிவிக்கின்றனர். அத்துடன் முன்னூறு கிராம் போதை பொருளுடன் ஒருவர் நெல்லியடி போலீசாரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் நெல்லியடி போலீசார் மேலும் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews