நல்லூர் கந்தசாமி கோயிலை போல இந்தியாவில் கோயில்களை நடத்த முன்வாருங்கள். தமிழ்நாட்டில் அண்ணாமலை கோரிக்கை .

நல்லூர் கந்தசுவாமி கோவிலை புகழ்ந்து இலங்கை கோவில்களை போன்று தமிழக கோவில்களை நடத்துமாறு பா.ஐ.க  தமிழக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்து யாழில் நல்லூர் ஆலயத்தை தரிசித்த பின்னர் அரசியல் வாதிகளையும் சந்தித்திருந்தார்.
அதன் பின் நேற்று முன்தினம் தமிழ்நாடு சென்ற நிலையில் அங்கு இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் எந்த கோவில்களிலும் அரசுக்கு அங்கு வேலை கிடையாது. அதே போல் நாம் தமிழகத்தில் செய்வோம்.
 யாழ்ப்பாணத்தில் முருகன் கோவில் இருக்கிறது. நல்லூர் கந்தசுவாமி கோவில் எனும் 13 நூற்றாண்டு பழைமைவாய்ந்த கோவில். அந்த கோவிலை நடத்துவது ஒரு அறங்காவலர். அங்கு அர்ச்சகர்களுக்கு தட்டில் காசு போட்டால் வாங்கமட்டார்கள். அர்ச்சணைக்கு ஒரு ரூபாய் மட்டுமே.
பணத்தை உண்டியலில் மாத்திரமே இடமுடியும். VIP, Non VIP என்றெல்லாம் கிடையாது. அனைவருமே வரிசையில் தான் செல்ல முடியும். தமிழ் நாட்டிலும் இவ்வாறன சட்டத்தை கொண்டு வர முடியாதா என கேள்வி எழுப்பினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews