திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்கஅதிபராக பி.எச்.என்.ஜயவிக்ரம நியமனம் –

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.எச்.என்.ஜயவிக்ரம தமது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாக மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார்.

சமய அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் காலை 9.20 சுப நேரத்தில் ஒப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

1992 ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப்பரீட்சை மூலம் இச்சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட இவர் மெதிரிகிரிய உதவி பிரதேச செயலாளர், ஹிக்கடுவ உதவி பிரதேச செயலாளர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பிரதி பணிப்பாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட முன்னர் மத்திய மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம்,சமூக நலன்புரி, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை அமைச்சின் செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews