மின்வெட்டு காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி –

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் வறுமையில் வாடியுள்ளனர் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய (5) பாராளுமன்ற அமர்வில் கட்டளை நியதிகள் சட்டம் 27/2 கீழ் அரசாங்கத்திடம் கேள்விகளை முன்வைக்கும்போதே அவர் இந்தக் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இதன்போது அவர், இன்று நாட்டில் வேலையின்மை விகிதம் என்ன? கடந்த 2 ஆண்டுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் வறுமையில் வாடியுள்ளனர்? மார்ச் 2022க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது நாட்டின் மொத்த கடன் சுமை என்ன?

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது எவ்வளவு தொகை அதிகமாகும்? தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அதிக வருமானம் ஈட்டுவோருக்கு வரிச்சலுகை வழங்கியதன் மூலம் அரச வருவாய் எவ்வளவால் குறைந்துள்ளது. மேற்கண்ட வரிச் சலுகையால் நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துவோர் தொகை எவ்வளவால் குறைவுக்குட்பட்டுள்ளன, 2019 உடன் ஒப்பிடும்போது கடந்த இரண்டு ஆண்டுகளில் அரச வருவாயுடன் ஒப்பிடும்போது அரச கடன்களுக்கான வட்டி விகிதம் என்ன, இத்தகைய அரசாங்க வருவாயுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி விகிதம் செலுத்தும் வேறு எந்த நாடும் உள்ளதா உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.

அத்துடன், ஏப்ரல் 2022க்குள் அதிகாரப்பூர்வ பயன்பாடு அல்லது உண்மையான வெளிநாட்டு கையிருப்பின் அளவு என்ன, சீன அரசாங்கத்தால் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் 10 பில்லியன் யுவான் வழங்கும் போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன? அந்த நிபந்தனைகளின் கீழ் இந்த வசதியைப் பெறுவதற்கான விசேடமான காரணங்கள் என்ன?

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் மீதமுள்ள 750 மில்லியன் அமெரிக்க டொலர்களை இரும்பு, உருக்கு இறக்குமதிக்காகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. அது உண்மையா? அப்படியானால், இந்த இரும்பு இறக்குமதியில் நிவாரணம் பெறுவது இருப்பு தொழிலில் ஈடுபடும் எந்த நிறுவனங்கள்?

சமீப காலமாக தொடர் மின்வெட்டு காரணமாக வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் நுகர்வு எந்த அளவுக்கு குறைந்துள்ளது கடந்த 6 மாதங்களில் மின்வெட்டு காரணமாக பொருளாதாரத்தில்

எந்தளவு நட்டம் ஏற்பட்டுள்ளது? சமீப காலத்தில் பாரிய விலை அதிகரிப்பினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளதா? இல்லையென்றால், நட்டத்தை எதிர்க்கொள்ளாது நடத்திச் செல்ல இன்னும் எந்தளவில் எரிபொருளை விலையை அதிகரிக்க வேண்டும்?

உள்ளிட்ட கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews