கட்டுதுவக்கு வெடித்து ஒருவர் படுகாயம், ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு j/434 கிராம சேவகர் பிரிவில் பாலைப்பழம் பிடுங்க சென்ற ஒருவருக்கே மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த பொறி வெடியான கட்டுத்துவக்கு வெடித்தே தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுருந்த நிலையில் அவர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்ட்டுள்ளார்.
இதில் போக்கறுப்பு j/434 கிராம சேவகர் பிரிவிலுள்ள ஜோசப் மைக்கல் வலண்டன் எனும் 38 வயதுடைய நபரே படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பான மேலதிக, செய்திகளை மருதங்கேணி போலீசார் மேற்கண்டு வருகின்றனர்.