
நாடு முழுதும் ஒருங்கிணைந்த தொழிற்சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்டு இன்றையதினம் இடம்பெறுகின்ற கதவடைப்பு போராட்டம் வடமராட்சியில் பருத்தித்துறை, மந்திகை, நெல்லியடி, போன்ற நகர் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது ஆக்காங்கே ஒருசில வரத்தக நிலையங்கள் மட்டும் திறந்துள்ளன.








ஆனால் மதுபான சாலைகள் திறந்துகாணப்படுகிறது.
அரசு வங்கிகளும் பூட்டப்பட்ட காணப்படுகின்றன.
ஒரு சில தனியார் வங்கிகள் காலை 11.00 மணியுடன் தமது சேவைகளை முடிவுறுத்தியுள்ளன.
இதேவேளை இன்றைய தினம் கதவடைப்பு காரணமாக தனியார் போக்குவரத்து சேவைகளும் இடம் பெறவில்லை. இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
அத்துடன் வடமராட்சி பகுதியில் உள்ள ஐந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றில் மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படுகிறது.
எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் தமது வாகனங்களுடநந் நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலிலும் காத்திருக்கின்றனர்.
வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிக மிக குறயயந்தளவிலையே காணப்படுகிறது.
அனைத்து சந்தைகளுள் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது.