
பதவி விலகும் திட்டமும் இல்லை, பதவி விலகும்படி ஜனாதிபதி கேட்கவுமில்லை. என பிரதமரின் ஊடக செயலாளர் கூறியுள்ளார்.
நேற்றய தினம் இரவு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின்போது
பிரதமரை பதவி விலகும்படி ஜனாதிபதி அழுத்தம் கொடுத்ததாகவும் பதவி விலக பிரமரும் இணங்கினார் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இனியும் செயற்பட முடியாது என்பதால் பிரதமர் பதவி விலகவுள்ளதாக அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் தானாகவே கலைந்துவிடும்.நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியான சூழ்நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை எனவும், தொழிற்சாலைகள் மூடப்படுவதும் கூட பெரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நெருக்கடிக்கு தீர்வு காணும் பட்சத்தில் பிரதமர் பதவியை விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என தகவல்கள் கசிந்திருந்தது.