அவசரகால தடைச் சட்டம் என்பது இன்று தமிழர்கள் பல்லாண்டுகளாக அனுபவித்த துன்பங்களை இப்போது சிங்கள மக்கள் அனுபவிக்க தலைப்பட்டிருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
நாங்கள் மிக முக்கியமாக அஞ்சுகிறோம். பல சிங்கள இளைஞர்கள் சிங்கள யுவதிகள் சிங்கள மக்கள் காணாமல் ஆக்கப்படப்போகிறார்கள் அல்லது கொல்லப்படப்போகிறார்கள். இந்த நாட்டிலே பேர் அனர்த்தம் ஒன்று நடைபெறப் போகிறது என்பதற்கான கட்டியம் கூறுவதாக தென்படுவதாகவே நாங்கள் இதை பார்க்கிறோம். அவசரகால சட்டமோ, ஊரடங்கு சட்டமே தேவையில்லை. ஏனென்றால் இந்த நாட்டிலே இருக்கின்ற இளைஞர் யுவதிகள் ராஜபக்ச குடும்பம் வெளியேறவேண்டும், இவர்கள் இந்த நாட்டினுடைய பணத்தை கொள்ளை அடித்ததை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் வெளியேற வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் இந்த ஜனநாயகப் போராட்டத்தை மேற்கொண்டு உள்ளார்கள். இந்த ஜனநாயக வழிப் போராட்டத்தை மழுங்கடித்து அந்த இளைஞர் யுவதிகளை கொல்கின்ற சிங்கள மக்களை மீண்டும் ஒரு மனிதப் படுகொலைக்கு கொண்டு செல்கின்ற ஒரு யுத்தியை ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த கோட்டபாய ராஜபக்ச ஆரம்பித்திருப்பதாக நாங்கள் அச்சம் கொள்கிறோம். இதில் சிங்கள மக்கள், சிங்கள இளைஞர், சிங்கள யுவதிகள் நீங்கள் அவதானமாக இருங்கள். உங்கள் மீது மனிதப் பேரவலத்தை கட்டவிழ்த்து விடுகிறதாகவே இந்த அவசரகால தடைச் சட்டத்தை நாங்கள் கருதுகிறோம். இந்த நாட்டிற்கு அது தேவையற்ற ஒன்று. அதைக் கொண்டு வரப்பட வேண்டிய அவசியமில்லை. சர்வதேச நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் கூட இது தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டும். அதிகமான அழுத்தத்தை இந்த ஜனாதிபதி மீதும் இந்த நாட்டின் ராஜபக்ச குடும்பம் மீது விதித்து இந்த மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதை பகிரங்கமாக இந்த நாடுகளிடம் முன்வைக்கின்றோம். எனத் தெரிவித்தார்.
கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் சுற்றுப் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை (07) மாலை 05:00 மணியளவில் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் வடமராட்சி ,வடமராட்சி கிழக்கு ஆகிய லீக் உடைபந்தாட்ட அணிகள் கலந்து மொண்டமை குறிப்பிட தக்க்து