ஊரடங்கிற்கு மத்தியிலும் முழுமையாக முடக்கப்படும் நாடு…!

நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு ஈடுபடவுள்ளன.

இது தொடர்பில் நேற்றைய தினம் அறிவிப்பு வெளியாகியிருந்தது

நள்ளிரவு 12 மணிமுதல் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த 1000 தொழிற்சங்கங்களே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சேவைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் காலை அலரி மாளிகை வளாகத்தில் மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டிருந்த மக்களை தாக்கியிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் நாடளாவிய ரீதியில் இயங்கிவரும் பல்வேறு துறைசார்ந்த 1000 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

நாட்டில் தற்போது பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும் கூட இலங்கையை முழுமையாக முடக்கி தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews