சபாநாயகர் தலைமையில் நாளை கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று கூட்டப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் நாட்டில் தற்போது நிலவும் முரண்பாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகுமென சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் காரணமாக புதிய பிரதமரை தெரிவு செய்யும் பொறுப்பு நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.