மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் வெறிசோடிய நிலையில் காணப்படுவதுடன் பொதுப்போக்குவரத்துகளும் நடைபெறவில்லை.
இதனிடையே, மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசாங்க ஆதரவு அரசியல்வாதிகளின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளின் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் சோதனையிடப்படுகின்றன.
இதேநேரம் மட்டக்களப்பு செங்கலடி சந்தியில் முன்னெடுக்கப்படும் கோட்டா கோம் கிராமத்தில் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, குறித்த பகுதியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.