முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை கைது செய்யுமாறு வலியுறுத்தி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கமல் விஜேசிறி, துசித குணசேகர, ராஜித லக்மால் மற்றும் ஏனைய சட்டத்தரணிகள் முறைப்பாட்டில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் ஆகியோரை குற்றவியல் அச்சுறுத்தல், குண்டர்களுக்கு உதவி செய்தல் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 486 மற்றும் 102 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யுமாறு கோரி முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தமது அதிகாரத்தை பயன்படுத்த தவறிய குற்றவியல் சட்டத்தின் 37 மற்றும் 38 ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர்கள் போரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றும் சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தை மீறிய அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரதியொன்று இன்று (11) சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.