இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் புலனாய்வுத்துறை முற்றுமுழுதாக செயலிழந்து போயிருப்பதாக தான் தெரிகிறது என பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய நிலவரங்களை முன்கூட்டியே அறிந்து அதற்குரிய வியூகங்களை வகுக்க வேண்டியது புலனாய்வுத் துறையின் கடமை. ஒரு சம்பவம் இடம்பெற்ற பின்னர் விசாரணை செய்வது பொலிஸாரின் கடமை.
சம்பவம் இடம்பெற முன்னர் அதனை தடுத்து நிறுத்துவது தான் புலனாய்வு துறையினரின் கடமை. இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் புலனாய்வுதுறை முற்றுமுழுதாக செயலிழந்து போயிருப்பதாக தான் தெரிகிறது. ஆனால் மறுபகுதியில் போராட்டக்காரர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.