லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் தனிப்பட்ட சேமிப்புக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கையொன்றின் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
எமது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் மூலமாக மாத்திரமு எரிவாயு விநியோகம், சேமிப்பு மற்றும் விற்பனை என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
அதற்கு முரணான வகையிலான சேமித்தல் மற்றும் கொள்கலன் இருப்புகளை பேணுப்படுமாயின் அது லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அனுமதியில்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.
அத்தகைய தனிப்பட்ட சேமிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் சிலரின் வீட்டிலிருந்து எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டதாக இன்றைய தினம் வெளியான செய்திகளையுடுத்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.