
யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் கடல்வழி போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதை சேவை இன்று தொடக்கம் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இயக்கப்படும் குறித்த பாதை பழுதடைந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு விடயம் எடுத்து செல்லப்பட்டது.
இதனையடுத்து குறித்த பாதை புனரமைப்பு செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் இன்றைய தினம் மீளவும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.